மோடி - சீன அதிபரை வரவேற்று அரசு சார்பில் பேனர் வைக்கலாம் - உயர்நீதிமன்றம்

மோடி - சீன அதிபரை வரவேற்று அரசு சார்பில் பேனர் வைக்கலாம் - உயர்நீதிமன்றம்
  • News18
  • Last Updated: October 10, 2019, 3:02 PM IST
  • Share this:
மாமல்லபுரத்தில் மோடி - சீன அதிபரை வரவேற்று அரசு சார்பில் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை நடைபெறுகிறது.  இந்த சந்திப்பையொட்டி, தலைவர்களை வரவேற்கும் வகையில் பேனர்களை வைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்ததைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. எனவே, மாமல்லபுரம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி பேனர் வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.


இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் பேனர் வைக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அரசு சார்பில் பேனர் வைத்துக்கொள்ளலாம் என்றும் அரசியல் கட்சியினர் சார்பில் பேனர் வைக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது

மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பேனர் வைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Also watch
First published: October 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading