Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

ADMK : அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

    அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், இன்று அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விவாதம் முடிந்ததை தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதிமுகவில் அமைப்பு ரீதியிலாக 75 மாவட்டங்கள் உள்ளன. அதில், எடப்பாடி பழனிசாமியே ஒற்றை தலைமையை ஏற்க வேண்டும் என 70 பேர் குரல் கொடுத்துள்ளனர். ஆனால், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக, அவரின் சொந்த மாவட்டமான தேனியின் மாவட்ட செயலாளர் சையது கான், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம், திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், கன்னியாகுமாரி அசோகன் என 5 பேர் மட்டுமே பின்னால் உள்ளனர்.

    இதேபோன்று தலைமைக் கழக நிர்வாகிகள் 74 பேரில் 68 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதிலும், ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் ஆகிய 6 தலைமைக் கழக நிர்வாகிகள் மட்டுமே மற்றொரு அணியாக உள்ளனர்.

    மேலும், எடப்பாடி பழனிசாமியை, தலைமைக்கு கொண்டு வர 2,452 பொதுக்குழு உறுப்பினர்கள் பக்கலமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஓ.பன்னீர்செல்வதிற்கு 213 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. அதிலும், ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் உள்ள மொத்தம் 62 பொதுக்குழு உறுப்பினர்களில், 42 பேர் ஈபிஎஸ்-க்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என்பதே அதிமுகவினரின் ஒற்றை நம்பிக்கையாக உள்ளது.

    Must Read : அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்... போராட்டம்.. கலவரம்.. போர்க்களமான அதிமுக தலைமையகம்..

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு, கட்சியின் சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுக்குழு கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும், விதிகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Chennai High court, EPS, OPS

    அடுத்த செய்தி