திருச்சி சின்னக்கடை விதியில் உள்ள ஒரு வங்கி, கடன் தொகை வசூல் செய்யும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததை திரும்ப பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் N.கிருபாகரன், B.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடனை வசூலிப்பதில் வங்கிகள் நடந்துகொள்ளும் விதம் குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, ’வங்கியில் கடன் பெற்று, பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு, வட்டி போடுவது நியாயமற்றது. எதன் அடிப்படையில் வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதை, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறது.
1,000 கோடி ரூபாய் கடன் பெற்ற தொழில் அதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகின்றனர். தனியார் நிறுவனங்கள் குண்டர்களை வைத்து கடன் தொகை வசூலிக்கின்றனர்.
இவ்வாறு செய்வதற்கு வங்கிகள் கடன் வழங்காமல் இருக்கலாம்’ என்று அதிருப்தி தெரிவித்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banks, Madhurai high court