கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது என்று
சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, ‘இந்த கோவிலுக்கு சொந்தமான 18 ஆக்கிரமிப்புகளில் 14 அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும். மொத்தமாக தமிழகத்தில் இதுவரையில் 1,100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அறநிலையத்துறை வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோவில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம். 50 ஆண்டு காலமாக உள்ள அக்கிரமிப்பு இடங்களை அகற்றாமல், இப்பொழுது வந்து கடந்த ஓராண்டாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவது ஏற்று கொள்ள முடியாது. ஆக்கிரமிப்புகளை அரம்பத்திலேயே தடுத்த நிறுத்த வேண்டிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மதுரையில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- ஆட்சியர் உத்தரவு
கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது’ என்று அதிருப்தி தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.