Home /News /tamil-nadu /

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசுப் பணியாளர்கள்: வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசுப் பணியாளர்கள்: வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சி அதிமுக செயலாளர் பொன்சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கும் கடந்த 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஆளும் திமுகவினர் முறைகேடுகளிலும், விதிமீறலிலும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், முறையாக வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் திமுகவினரை வெற்றி பெற்றதாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதால், மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யவும் மனுவில் கோரியுள்ளார்.

    இந்த மனு அவசர வழக்காக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பின்பற்றினாலும், ஆளுங்கட்சியினரால் தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு ஊழியர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் எனக் கோரினார்.

    யார் மிரட்டப்பட்டது? எந்த அதிகாரியாவது புகார் அளித்துள்ளாரா? மிரட்டியதாக குற்றம் சாட்டும் நபர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்களா? மனுதாரருக்கு இதுவரை ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துள்ளதா? என தலைமை நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், தேர்தலில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ளதாகவும், மாநில தேர்தல் ஆணையமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    திமுக சதி...வெற்றி பெறுவோருக்கு உடனுக்குடன் வெற்றி சான்றிதழ்: அண்ணாமலை வலியுறுத்தல்

    இதேபோல முதுகுளத்தூர் பேரூராட்சி ஏழாவது வார்டு அதிமுக வேட்பாளரும், வாக்கு எண்ணிக்கைக்கு மற்ற தாலுகா அதிகாரிகளை நியமிக்க கோரிய வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Chennai High court, Local Body Election 2022

    அடுத்த செய்தி