பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் - திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த 12 பேர் மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து!
பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் - திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த 12 பேர் மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து!
மாதிரி படம்
நீட் தேர்வை எதிர்த்து மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தி நகரில் கண்டன போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய தந்தை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் உட்பட 12 பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நீட் தேர்வை எதிர்த்து மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தி நகரில் கண்டன போராட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. இதையடுத்து, தி நகர் போலீசார் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் உமாபதி,தலைமை நிலைய செயலாளர் தபசிகுமரன் உள்ளிட்ட 12 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், உருவ பொம்மை எரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் .மேலும் சென்னை சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
இதை எதிர்த்து உமாபதி உள்ளிட்ட 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188 பிரிவில், காவல்துறை நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியாது, மாஜித்திரேட்டிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், ஜனநாயக முறையில் நடைபெற்ற போராட்டம் தான் என்றும் இது ஒரு சட்ட விரோத போராட்டம் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி, ஜனநாயக ரீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராக காவல்துறை பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்ட 12 பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.