சென்னையில் அதிகஅளவில் சட்ட விரோதமாக அதிமுக பேனர்கள்: நீதிமன்றம் குற்றச்சாட்டு!

சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுப்பதாக தலைமை செயலாளர் கூறும் நிலையில், ஆளும்கட்சியினரே அதிக பேனர்கள் வைப்பதாக நீதிபதிகள் சாடினர்.

Web Desk | news18
Updated: August 7, 2019, 7:57 PM IST
சென்னையில் அதிகஅளவில் சட்ட விரோதமாக அதிமுக பேனர்கள்: நீதிமன்றம் குற்றச்சாட்டு!
FILE
Web Desk | news18
Updated: August 7, 2019, 7:57 PM IST
சென்னையில் ஆளும் கட்சியினரே அதிகளவில் சட்டவிரோத பேனர்களை வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

சட்டவிரோத பேனர் வழக்கில் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த தவறியதாக தமிழக தலைமை செயலாளர் மீது டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வருக்கு பேனர் வைத்த விவகாரம் குறித்து தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில் இன்று இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புகழேந்தி காணொளி காட்சி மூலம் விசாரித்தனர்.

அப்போது, தலைமை செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருமண விழாவிற்கு 100 பேனர் வைக்க அதிமுக நிர்வாகி ராஜா என்பவர் விண்ணப்பித்ததாகவும், அதை மாவட்ட நிர்வாகம் நிராகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல அரசு தரப்பில், கோயம்பேடு முதல் வானகரம் வரை வைக்கப்பட்டிருந்த 70 பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சட்டத்திற்கு உட்பட்ட விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Loading...

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் இந்த பேனர்கள் வைக்கும் போது அதிகாரிகள் எங்கே சென்றனர் என கேள்வி எழுப்பினர்.

சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு மீதும், நீதி பரிபாலன முறை மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுப்பதாக தலைமை செயலாளர் கூறும் நிலையில், ஆளும்கட்சியினரே அதிக பேனர்கள் வைப்பதாக நீதிபதிகள் சாடினர்.

சட்டவிரோத பேனர்கள் வைக்க கூடாது என தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தும்படி  அரசியல் கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதிகாரிகளிடம் முறையாக தகவல் பெற்று மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை தலைமை செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Also see...

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...