ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க அலுவலகம்

அ.தி.மு.க அலுவலகம்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடையில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

  இதேபோல தணிகாச்சலம் என்பவரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

  வழக்கு விசாரணையின்போது, ‘பொதுக்குழுவிற்கான அஜெண்டா இதுவரை வெளியிடப்படவில்லை. அலுவல் நிகழ்வு குறித்து தெரிவிக்கவில்லை. 2021 டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்தது. ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளது. ஒற்றைத் தலைமை குறித்து விவாதங்கள் நடந்து கொண்டுள்ளது. பொதுச்செயலாளராக யாரையும் தேர்வு செய்ய முடியாது. தற்போது ஒற்றைத் தலைமை குறித்து திருத்தம் கொண்டு வர உள்ளனர். ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் பொது செயலாளரை நியமிக்க முடியாது. ஜனநாயக மரபுகளை பின்பற்ற வேண்டும். விதிகளை திருத்த முடியாது. பொதுக்குழு நடக்கலாம். ஆனால் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வரக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ என்று சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது.

  அதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், ‘23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நேற்று கடிதம் எனக்கு அனுப்பப்பட்டது. 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதைத் தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டு விட்டது. நான் அதிமுக சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட மாட்டேன். நாளைய கூட்டத்தில் கலந்து கொள்வேன். ஆனால் 23 தீர்மானம் தவிற வேறு எதையும் முடிவெடுக்க கூடாது’ என்று வாதிடப்பட்டது.

  அதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில், ‘கட்சி அஜெண்டாவை முன் கூட்டியே வெளியிட முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயா கால கட்ட சூழல் வேறு. அதிமுக'வில் பொதுக்குழுக்கு தான் அதிக அதிகாரம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அல்ல. பொதுக்குழுவின் முடிவே இறுதியானது.

  திருத்தம் என்பது 2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம். நாளை திருத்தம் நடக்கலாம். நடக்காமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும். பொதுக்குழுவுக்கு தடை விதிகக்கூடாது. கட்சி விதிகளைத் திருத்திய பிறகு தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதுமானது. பொதுக்குழுவுக்கு தடைகோரும் மனுவே விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று வாதிடப்பட்டது.

  அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘அனைத்து தரப்பினரும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஒருங்கிணைப்பாளரும் மற்ற மனுதாரர்களும் கட்சி விதிகளை திருத்தம் செய்ய, குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைப்பது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றவே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

  அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் மண்டபத்தை சுற்றி திரண்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்- இ.பி.எஸ்ஸை வரவேற்று வைத்த பேனர்கள் கிழிப்பு

  இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான முகாந்திரத்தை நிரூபிக்கவில்லை. இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் யூகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது.

  கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. இந்தவழக்கில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை ஜூலை 11-ம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

  Published by:Karthick S
  First published:

  Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam