Home /News /tamil-nadu /

கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தணைகளுடன் அனுமதி வழங்கியது நீதிமன்றம்!

கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தணைகளுடன் அனுமதி வழங்கியது நீதிமன்றம்!

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கடுமையான நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தணையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி  உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பல்வேறு கோயில் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. இந்த திருவிழாக்களை முன்னிட்டு, ஆடல் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையும் வாசிக்க: நீங்கள் பேசியது உங்களுக்கே ஞாபகம் இல்லையா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் சராமாரி கேள்வி

இந்த மனுக்கள் அனைத்தும் தனிதனியாக, நீதிபதி சக்திகுமார் முன்  விசாரணைக்கு வந்தது. அதில், சில நிபந்தனைகளுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தலாம் என அவர் உத்தரவிட்டார்.

நிபந்தனைகள்:

அரசியல் கட்சிகளின் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் இருக்கக் கூடாது.

ஜாதிய ரீதியான வன்மங்கள் இருக்கக் கூடாது. இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ , மதுபானத்தையோஉட்கொள்ளக் கூடாது

நிகழ்ச்சி இரவு 7:00 மணி முதல் இர.வு 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்

 
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Celebrations, High court, Hindu Temple, Madhurai high court

அடுத்த செய்தி