Home /News /tamil-nadu /

பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள்! வாட்ஸ்அப்-க்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள்! வாட்ஸ்அப்-க்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

முன்னாள் காதலன்/ காதலியின் சமூகவலைதளத்தை பார்த்தல் : இன்றைய காலகட்டத்தில் முன்னாள் காதலன்/ காதலியின் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்கள் உங்கள் கண்களில் படுவது இயல்புதான். ஆனால், உங்கள் பார்ட்னர், அவரின் முன்னாள் பார்ட்னருடைய சமூகவலைதள பக்கங்களிலேயே மூழ்கியிருந்தால், பழைய நினைவுகளில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. இதனால், முன்னாள் பார்னருடைய நினைவலைகளிலேயே இருப்பார்கள். உங்கள் இருவருக்கும் இடையே இது ஒருவித தவறான புரிதலை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம். மேலும், நீங்கள் உங்கள் பார்ட்னருடைய பழைய பதிவுகளை பார்க்கும்போது, அதனை அவர் பார்த்துவிட்டால், உங்கள் மீது எதிர்மறை எண்ணம் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு.

காவல்துறையின் உயர் அதிகாரிகள் கேட்கும் பட்சத்தில் மட்டுமே இது போன்ற தகவல்களை வழங்க முடியும். இணையதள குற்றங்கள் தொடர்பான தகவல்களை வழங்க, தங்களைக் கட்டுப்படுத்தும் டிராய் அமைப்பு தான் விதிகளை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, புதுக்கோட்டை பொன்னமராவதி கலவரம் போன்ற சம்பவங்கள் சமூக வலை தளங்களில் பரவியதனாலேயே சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனைகள் உருவாகி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், தனி நபர்களுக்கு எதிரானத் தாக்குதல்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் முகநூல், வாட்ஸ் அப், கூகுள் மின்னஞ்சல், யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் அதனை உபயோகப்படுத்தும் நபர்களின் ஆதார் அட்டை எண்ணை கண்டிப்பாக இணைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சைபர் கிரைம் காவல்துறை தரப்பில், ’பேஸ்புக் மூலம் நடைப்பெற்ற இணையதள குற்றங்கள் தொடர்பாக சமீபத்தில் 1,400 புகார் பெறப்பட்டதாகவும் அதில் 400 புகார்கள் தொடர்பாக மட்டுமே தங்களுக்கு விசாரணை மேற்கொள்ள தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

யூ டியூப், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் நடைபெறும் இணையதள குற்றங்கள் தொடர்பான விவரங்களை இணைதள சேவை வழங்கும் நிறுவனங்களும், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களும் விசாரணைக்குத் தேவையான முழுமையான தகவல்களை வழங்குவது இல்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சமூக வலைதள நிறுவனங்கள் தரப்பில், ’தகவல்களை வெளியிடுபவர்கள் குறித்த விவரங்கள் இணையதள சேவை நிறுவனங்களின் வசம் தான் இருக்கும். அத்தகைய இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இணையதள சேவை நிறுவனங்கள் தரப்பில், ’இணையதள குற்றச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் மூலம் பலரும் பெற முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு தகவல்களை அனைவருக்கும் வழங்கினால் அது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் என விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், ’காவல்துறையின் உயர் அதிகாரிகள் கேட்கும் பட்சத்தில் மட்டுமே இது போன்ற தகவல்களை வழங்க முடியும். இணையதள குற்றங்கள் தொடர்பான தகவல்களை வழங்க, தங்களைக் கட்டுப்படுத்தும் டிராய் அமைப்பு தான் விதிகளை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், ’பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோ, புதுக்கோட்டை பொன்னமராவதி ஆடியோ விவகாரம் ஆகியவை சமூக வலைதளங்களில் வெளியானதால் தான் சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகி உள்ளதாக தெரிவித்தனர்.

சமூகப் பிரச்சனைகளை உருவாக்கும்
இதுபோன்ற விவகாரங்களை இணையதளத்தில் வெளியிடுபவர்கள் குறித்த விவரங்களை காவல்துறை விசாரணைக்காக பெறும் வகையில் குழு அமைக்கலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வியாபாரத்திற்காக மட்டும் இயங்காமல், சமூகத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் தகவல்களை தடுப்பதிலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தி இதுதொடர்பான விசாரணையை ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: High court, Social media

அடுத்த செய்தி