ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டங்கள் : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டங்கள் : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

எல்லா பல்கலைக்கழகங்களிலும் தமிழ், ஆங்கிலத்தை கட்டாய மொழி பாடங்களாக கற்றுக்கொடுக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

  பல்கலைக்கழக துணை வேந்தர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.

  இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு வழக்கு: பாரம்பரிய விளையாட்டை ஒழிக்கவே பீட்டா மனு- தமிழக அரசு

  அப்போது பேசிய அவர், எல்லா பல்கலைக்கழகங்களிலும் தமிழ், ஆங்கிலத்தை கட்டாய மொழி பாடங்களாக கற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறினார். பாடத்திட்ட மாற்றம் அடுத்த ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். நான் முதல்வன் திட்டத்தின்படி எந்த படிப்பை படித்தாலும் அவர்களுக்கு திறனாய்வு பயிற்சி கட்டாயம் கொடுக்கப்படும் எனவும் பொன்முடி குறிப்பிட்டார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Minister Ponmudi, Vice chancellor