குளியலறையில் ரகசிய கேமரா: கேரளாவில் கொரோனா முகாமில் நடந்த கொடூரம்

கேரளாவில் கொரோனா முகாமில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை, குளிக்கும்போது செல்போன் வைத்து வீடியோ பதிவு செய்த DYFI நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 

  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 9:34 AM IST
  • Share this:
கேரளாவில் தொடக்கத்தில் அதிகரித்தும் பின்னர் கட்டுக்குள்ளும் இருந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவிலுள்ள பல்வேறு கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான பாறசாலையில் ஸ்ரீ கிருஷ்ணா பார்மசி கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கேரளா மாநிலம் செங்கல் பகுதியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் 25 வயதான ஷாலு கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதே சிகிச்சை மையத்தில் பாறசாலை அருகே உள்ள 20 வயது இளம் பெண்ணும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்தபோது ஒரு செல்போன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த செல்போனை எடுத்து பார்த்தபோது குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து செல்போனை எடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கொடுத்து அந்த பெண் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து பாறசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது செல்போன் அந்த மையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஷாலுவின் செல்போன் என தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் செல்போனை மறைத்து வைத்து வீடியோ பதிவு செய்ததை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து அவரை கைது செய்தனர்.


மேலும் படிக்க... எஸ்.பி.பி.க்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன?

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு 108 ஆம்புலன்சில் வைத்து கொரோனா பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது மறைவதற்கு அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளாதால் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading