ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பரங்கிப்பேட்டை கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய ஹெராயின் பாக்கெட்டுகள்

பரங்கிப்பேட்டை கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய ஹெராயின் பாக்கெட்டுகள்

கரை ஒதுங்கிய ஹெராயின் பாக்கெட்டுகள்.

கரை ஒதுங்கிய ஹெராயின் பாக்கெட்டுகள்.

பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது ஹெராயின் பாக்கெட்டுகள் என்றும் அதன் ரூ.3 கோடி என்றும் தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை போலீசார் புதுப்பேட்டை கடற்கரை கிராமப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரை ஓரத்தில் சுமார் அரை கிலோ எடை கொண்ட 4 பாக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளனர்.

அவற்றை சோதனை செய்தபோது அதன் மேல் சைனீஸ் டீத்தூள் என எழுதப்பட்டிருந்தது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் பாக்கெட்டைப் போலவே இதுவும் இருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் அவற்றை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

Also see:

4 பாக்கெட்டுகளிலும் இருப்பது டீத்தூளா அல்லது போதைப் பொருளா என்பதை அறிய சோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், புதுப்பேட்டை கடற்கரை ஓரம் கரை ஒதுங்கிய பொருள் ஹெராயின் வகை போதைப் பொருள் எனவும் அதன் மதிப்பு  ரூ.3 கோடி ரூபாய் இருக்கலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Published by:Rizwan
First published:

Tags: Cuddalore, Heroine