ரூ.1,526 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: பாகிஸ்தானுக்கு தொடர்பு- குமரி மீனவர்கள் உட்பட 20 பேர் சிறையில் அடைப்பு
ரூ.1,526 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: பாகிஸ்தானுக்கு தொடர்பு- குமரி மீனவர்கள் உட்பட 20 பேர் சிறையில் அடைப்பு
லட்சத்தீவு பகுதியில் ரூ.1,526 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தி வந்த 20 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையில் பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது.
லட்சத்தீவு பகுதியில் ரூ.1,526 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தி வந்த 20 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையில் பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மற்றும் வள்ளவிளை சார்ந்த இரு விசைப் படகுகளில் இருந்து ரூ.1,526 கோடி மதிப்புள்ள ஹெராயின் லட்சத்தீவு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் கன்யாகுமரி மீனவர்கள் உட்பட கடத்தலில் ஈடுபட்ட 20 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) மற்றும் இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், லட்சத்தீவு கடற் பகுதியில் சர்வதேச சந்தையில் சுமார் ₹1,526 கோடி மதிப்புள்ள மொத்தம் 218 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 'ஆபரேஷன் கோஜ்பீன்' என்ற பெயரில் நடத்திய விசாரணையில் குமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியை சேர்ந்த விஜயன் என்பவருக்கு சொந்தமான பிரின்ஸ் என்ற விசைப்படகு மற்றும் சின்னத்துறை பகுதியில் உள்ள லிட்டில் ஜீஸஸ் ஆகிய இரண்டு படகுகளில் இருந்து பதுக்கி வைத்திருந்த ஹெராயின் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட குமரி மீனவர்கள் உட்பட சுமார் 20 பேரை கொச்சி துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
விசாரணையில் பறிமுதல் செய்த ஹெராயின் பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டது உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானில் இருந்து லட்சத்தீவு வழியாக கன்னியாகுமரிக்கு போதைப்பொருள் கடத்த திட்டமிட்டுள்ளதும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெராயின் பாக்கெட்டுகளில் பாகிஸ்தானில் உள்ள நிறுவன முகவரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாக்கெட்டுகளில் சர்க்கரை என்று எழுதப்பட்டிருந்தது. கடத்தலில் ஈடுபட்ட 20 பேரில் நான்கு பேருக்கு கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. 20 பேரையும் கொச்சி தோப்பும்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போதைப் பொருள் கடத்திய இரண்டு படகுகளும் இந்தியக் கடற்கரைக்கு பொருட்களை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் டி.ஆர்.ஐ தெரிவித்துள்ளது. இவர்கள் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக போதை பொருட்களை கடல் மார்க்கம் வழியாக இந்தியாவிற்கு கொண்டு வந்து கைமாற்றம் செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என டி.ஆர்.ஐ தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட படகு உரிமையாளர் கிறிஸ்பின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என ரிமாண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தோப்பும்பட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க டி.ஆர்.ஐ முடிவு செய்துள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னால் மேலும் சிலரின் தொடர்பு குறித்து டி.ஆர்.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.