Home /News /tamil-nadu /

நகைக்கடன் தள்ளுபடி.. யார் யாருக்கு பலன் கிடைக்கும் - விவரங்கள் இதோ

நகைக்கடன் தள்ளுபடி.. யார் யாருக்கு பலன் கிடைக்கும் - விவரங்கள் இதோ

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடன் தள்ளுபடிக்கு தகுதிபெறும் நகைக்கடன் தாரரின் மாவட்ட வாரியான பட்டியல் இணை பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
     கூட்டுறவு சங்கத்தில் அரசு அறிவித்துள்ள விதிகளின்படி தகுதியுள்ள 13 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  அதன்படி, கடந்த செப்டம்பர் 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கூட்டுறவு சங்க நகை கடன்களை ஆய்வு செய்யும் பணிகளை நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் சொல்வதென்ன..

    நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தேனியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு வங்கிகளில் 5பவுன் வரை வைத்துள்ள ஏழை எளிய மக்கள், விவசாயிகளின் கடன்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளுபடி செய்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் 35 லட்சம் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் 13 .5 லட்சம் பேர் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கடன் தள்ளுபடி ரசீது அச்சடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் இருந்தே தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கப்படும். கூட்டுறவு சங்க நிர்வாகிகள், நகைக்கடன் தள்ளுபடிக்கு பணம் எதுவும் கேட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Also Read: தமிழகத்தை வளர்ச்சியின் குறியீடாக கொண்டு செல்வதே எனது இலக்கு - மு.க.ஸ்டாலின்

    யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி:   இந்நிலையில் யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி என்ற விவரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பொதுநகைக்கடன் மற்றும் தள்ளுபடி பெறப்போகும் பயனாளிகள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக கூட்டுறவுத்துறை பதிவாளர்  சண்முக சுந்தரம் கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 விண்ணப்பங்கள் தகுயில்லாதவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள்

    • ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள அவர்களின் குடும்பத்தினர்,

    • நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்கள்

    • 40 கிராமுக்கு மேல் நகைக்கடன் பெற்ற நபர் மற்றும் குடும்பத்தினர்

    • கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்தம் குடும்பத்தினர்,

    • கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,

    • அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்,

    • ரேஷன் அட்டைக்கான எண்ணை  வழங்காதவர்கள் அல்லது தவறாக வழங்கியவர்கள்,

    •  ஆதார் எண் வழங்காதவர்கள் அல்லது தவறாகக் கொடுத்தவர்கள், எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள்,

    • ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாக நகைக்கடன் பெற்ற AYY குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோர் நகைக்கடன் பெற தகுதியில்லாதவர்கள் என்று  கூறப்பட்டுள்ளது.


    நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் தள்ளுபடிக்கு தகுதிபெறும் நகைக்கடன் தாரரின் மாவட்ட வாரியான பட்டியல் இணை பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    Also Read:  கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: இத்தனை லட்சம் பேருக்கு தகுதியில்லை என தமிழக அரசு அறிவிப்பு

    தகுதி பெறாத மற்றும் உத்தேச தகுதி பெற்றவர்களின் பட்டியலின்படி கள ஆய்வு மேற்கொள்ளும்போது தகுதி பெற்றவராக தெரிந்தால் அவர்களை கூடுதலாக சேர்க்க வேண்டும். உதாரணத்திற்கு ரேஷன் கார்டு , ஆதார் எண் ஆகியவை குறைபாட்டுடன் அளித்திருந்தால்  அவர் தகுதிபெறாதவர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பார் கள ஆய்வில் ரேஷன் கார்டு, ஆதார் எண் முழுமை பெற்றிருந்தால் அவரும் கடன் தள்ளுபடி பெற தகுதிபெற்றவர் ஆகிறார். பதிவாளர் அலுவலத்தில் இருந்து இறுதி ஒப்புதல் வந்த பிறகே பொதுநகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் “எனக் கூறப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bank Loan, DMK, Gold loan, MKStalin, Tamil News

    அடுத்த செய்தி