• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மகளிர் சுய உதவிக் குழுக்களின் குறைகளைக் களைய உதவி மையம் - அமைச்சர் பெரிய கருப்பன்

மகளிர் சுய உதவிக் குழுக்களின் குறைகளைக் களைய உதவி மையம் - அமைச்சர் பெரிய கருப்பன்

பெரிய கருப்பன்

பெரிய கருப்பன்

மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள குறைகளைக் களைய உதவிமையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மாவட்டந்தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் உள்ள குறைபாடுகளை களைய மாநில அளவில் ஓர் உதவி அழைப்பு மையம் உருவாக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

    சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில் நுண்நிதி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மகளிர் திட்ட அலுவலர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியக்கருப்பன் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

    சுய உதவிக் குழுக்களிடம் நுண்நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பதில் கடுமையான போக்கினை கையாளுவதாக புகார்கள் வந்த நிலையில் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பிரச்சனைகளை காணொலி வாயிலாக அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் மாவட்டந்தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் உள்ள குறைபாடுகளை களைய மாநில அளவில் ஓர் உதவி அழைப்பு மையம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மிக விரைவில் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

    குறு நிதி நிறுவனங்கள் தங்களுடைய கடனை வசூலிக்கும்போது மென்மையான போக்கினை கையாள வேண்டும் எனவும், இப்பேரிடர் காலத்தில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு எந்தவிதமான இன்னல்களும், குறு நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் ஏற்படக் கூடாது என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் கோபால், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: