முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் இன்று முதல் கட்டாயம்...

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் இன்று முதல் கட்டாயம்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இருசக்கர வாகனத்தில் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

 இருசக்கர வானங்களில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைகவசம் (Helmet) அணிய வேண்டும் என்ற உத்தரவு சென்னை பெருநகர பகுதிகளில் இன்று முதல்  அமலுக்கு வந்துள்ளது. இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சென்னையில் 2021-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில், இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். 3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,929 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.

கடந்த 5 மாதங்களில் இரு சக்கர வாகனம் மூலமாக 841 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 741 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும், 127 பேர் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதை படிங்க: மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி.. திறமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்கள்

அதன்படி,  இருசக்கர வாகனத்தில் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும், "ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் நபர்கள் என இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்பு வழங்கியதில் மிகப்பெரிய மோசடி?

இந்த உத்தரவு இன்று அமலுக்கு வந்துள்ளது. உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய ஹெல்மெட் உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய 312 சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Helmet, Traffic Police