கொளுத்தும் வெயிலால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை - தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்

சென்னையில் பைக் பந்தயத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழிந்துள்ளதாகவும், அதில் வாகனத்தை ஓட்டியவர் கூட ஹெல்மெட் அணியவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்..

கொளுத்தும் வெயிலால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை - தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: June 4, 2019, 11:57 AM IST
  • Share this:
வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஒட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி கே.கே. ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஹெல்மேட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மேட் அணிவது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மேட் அணிவதில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது..

அதேபோல, சென்னையில் பைக் பந்தயத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழிந்துள்ளதாகவும், அதில் வாகனத்தை ஓட்டியவர் கூட ஹெல்மெட் அணியவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்..

சட்டவிரோதமாக நடத்தப்படும் பைக் பந்தயத்தை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது..இதனையடுத்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து ஜூன் 6-ம் தேதி போக்குவரத்து கா

காவல்துறையின் இணை மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

First published: June 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading