Home /News /tamil-nadu /

‘ஹலோ அண்ணாமலை’... தோளை தட்டி நலம் விசாரித்த பிரதமர் மோடி - நெகிழ்ந்த அண்ணாமலை

‘ஹலோ அண்ணாமலை’... தோளை தட்டி நலம் விசாரித்த பிரதமர் மோடி - நெகிழ்ந்த அண்ணாமலை

அண்ணாமலை- பிரதமர் மோடி

அண்ணாமலை- பிரதமர் மோடி

Narendra Modi : தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தோளை தட்டி பிரதமர் நலம் விசாரித்தார். இதனால் நெகிழ்ச்சியடைந்தார் அண்ணாமலை.

    தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசின் பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வரவேற்றனர். மோடியின் வருகையை முன்னிட்டு, பாஜக சார்பில் விமான நிலைய வளாகத்தில் மேள, தாளங்கள் முழங்க பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

    பின்னர், சென்னை விமான நிலையத்திலிருந்து ஐ.என்.எஸ்., அடையாறு கடற்படைத் தளத்திற்கு, ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சென்றார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். சிலப்பதிகாரம் புத்தகத்தையும் மோடிக்கு பரிசாக வழங்கினார்.

    அண்ணாமலையுடன் பிரதமர் மோடி


    அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரதமரை வரவேற்க சென்றார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, “ஹலோ அண்ணாமலை எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்து அண்ணாமலையின் தோளை தட்டிப் பேசினார். இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் நெகிழ்ந்தார் அண்ணாமலை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிரதமர் மோடி


    அதனைத் தொடர்ந்து, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழியெங்கிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, சிவானந்தா சாலையில் காரின் கதவை திறந்து அதிலிருந்து எழுந்து நின்ற பிரதமர் மோடி, பொதுமக்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

    நரேந்திர மோடி


    Must Read : சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்த இளைஞர்... போக்சோவில் கைது

    பின்னர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி - முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. அதன்பின்னர், 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்து, முடிவுற்ற 5 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Annamalai, BJP, Chennai, Narendra Modi

    அடுத்த செய்தி