Home /News /tamil-nadu /

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி

பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. உயிரிழந்த 13 பேரில் உடல்கள் ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது.

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

    நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் நேற்று சென்றனர்.

    கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட Mi-17V5 ரக ஹெலிகாப்டர், வெலிங்டனில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Also Read : கறுப்பு பெட்டி சிக்கியது எப்படி? | BIPIN RAWAT HELICOPTER CRASH

    பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. உயிரிழந்த 13 பேரில் உடல்கள் ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது.

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவத்தினரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தர ராஜன், தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன்பின்னர், தமிழக அரசின் அமரர் ஊர்தி வாகனத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சூலூர் விமானப்படைத் தளத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டன.

    செல்லும் வழியில் அடுத்தடுத்து 2 முறை வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. பிபின் ராவத்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : பிபின் ராவத் உள்பட ராணுவத்தினரின் உடல்களை கொண்டு செல்லும் வழியில் அடுத்தடுத்து நேர்ந்த 2 விபத்து
    Published by:Musthak
    First published:

    Tags: Helicopter, Helicopter Crash

    அடுத்த செய்தி