நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக 26 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து, இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை தொடர்பாக நீலகிரி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
நேற்று 08.12.2021 ஆம் தேதி காலை நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சூலூர் விமானப்படை தளத்தில் முப்படை இராணுவ அதிகாரிகளின் இருந்து ஹெலிகாப்டர் விமானம் மூலம் முப்படைகளின் தளபதி திரு. பிபின் ராவத் அவர்கள், அவரது துணைவியார் மற்றும் 12 இதர இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விமானம் அருகில் குன்னூர் இராணுவப்பயிற்சி கல்லூரி மேல்குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் வான் வெளியில் பறந்துகொண்டு இருந்தபோது திடீரென அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது.
Also Read : ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் நலமுடன் உள்ளார்: தமிழிசை தகவல்
இந்தச்சம்பவம் பற்றி அறிந்த உடனேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி திரு. பிபின் ராவத் அவர்கள், அவரது துணைவியார் மற்றும் 11 இதர இராணுவ அதிகாரிகள் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. விமானத்தின் குரூப் கேப்டன் திரு. வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்தில்
இந்த விபத்து தொடர்பான புலன் விசாரணை மற்றும் விபத்து நடந்தது குறித்த விரிவான ஆலோசனை கூட்டம் இன்று 09.12.2021 ம் தேதி மாலை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு. C. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்களின் தலைமையில் குன்னூரில் நடைபெற்றது.
Also Read : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... முக்கிய அப்டேட் வெளியிட்ட இந்திய ராணுவம்
இந்த கூட்டத்தில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் இந்த விபத்து வழக்கின் விசாரணை அதிகாரி உட்பட இதர காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தடயவியல் இயக்குனர் அவர்களும் விரிவான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இது தொடர்பாக மேல்குன்னூர் காவல் நிலைய கு.எண் 129/2021 பிரிவு 174 குவிமுச (குற்றவியல் விசாரணை முறை சட்டம்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு.முத்து மாணிக்கம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீலகிரி மாவட்டம் அவர்கள் புலன்விசாரணை நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதிகாரியாக
சம்பவ இடத்திறகு முதல் முதலாக சென்று தீக்காயங்களுடன் போராடிய நான்கு அதிகாரிகளை விரைவாக மீட்ட காவலர் சிவா, திரு.முத்து மாணிக்கம் கூடுதல் காவல் கண்காணிப்பாளார், துனைகாவல் கண்காணிப்பாளர் சசிகுமார் ஆய்வாளர் பிரிதிவிராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி ஆகியோரை காவல் துறை தலைமை இயக்குநர் பாராட்டினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Helicopter Crash