Home /News /tamil-nadu /

ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் நலமுடன் உள்ளார்: தமிழிசை தகவல்

ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் நலமுடன் உள்ளார்: தமிழிசை தகவல்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் நலமுடன் இருப்பதாக புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட Mi-17V5 ரக ஹெலிகாப்டர், வெலிங்டனில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Also Read : ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய குரூப் கேப்டன்... வீர தீரத்திற்கான பதக்கத்தை பெற்றவர்

உயிரிழந்த 13 பேரில் உடல்கள் ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவத்தினரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தர ராஜன், தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது, முப்படைகளின் ஒருங்கிணைந்த தளபதியாக பிபின் ராவத் சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஒவ்வொரு நொடியும் அவர் நாட்டிற்காக செலவு செய்திருக்கிறார். அவர் உயிரிழந்தது குறித்து அறிந்ததும் நமது நெஞ்சமே நொருங்கி விட்டது. அதனால் தான் ஓடோடி வந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குரூப் கேப்டன் வருண் சிங் உடல் நலம் தேறி வருகிறார். அவரது முக்கிய பாகங்கள் சீராக இயங்கி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Also Read ;  பிபின் ராவத் உள்பட ராணுவத்தினரின் உடல்களை கொண்டு செல்லும் வழியில் அடுத்தடுத்து நேர்ந்த 2 விபத்து

படுகாயம் அடைந்த குரூப் கேப்டன் வருண் சிங், தனி விமானம் மூலமாக சிறப்பு சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்படவுள்ளார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Helicopter Crash

அடுத்த செய்தி