Home /News /tamil-nadu /

பிபின் ராவத் உள்பட ராணுவத்தினரின் உடல்களை கொண்டு செல்லும் வழியில் அடுத்தடுத்து நேர்ந்த 2 விபத்து

பிபின் ராவத் உள்பட ராணுவத்தினரின் உடல்களை கொண்டு செல்லும் வழியில் அடுத்தடுத்து நேர்ந்த 2 விபத்து

ஒருமுறை அமரர் ஊர்தி வாகனம் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் ஒரு வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், அதனை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. செல்லும் வழியில் உடல்களைக் கொண்டு சென்ற வாகனம் மற்றும் போலீஸ் வாகனம் ஆகியவை அடுத்தடுத்து விபத்தை எதிர்கொண்டது.

    ஒருமுறை அமரர் ஊர்தி வாகனம் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் ஒரு வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், அதனை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து, அந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரரின் உடல், வெளியே எடுக்கப்பட்டு பின்னால் வந்து கொண்டிருந்த வாகனத்தில் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

    Also Read : பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்!

    இதேபோன்று, 13 வாகனங்களுக்கு பின்னால் காவல்துறை வாகனம் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அருகேயிருந்த பள்ளத்தில் விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    வாகனத்தின் முன்பக்க சிதைந்த நிலையில், சிறு சிறு காயங்களுடன் 3 போலீசார் உயிர்தப்பினர். திருப்பூர் மாவட்ட காவல் துறைக்கு சொந்தமான இந்த வாகனத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

    Also Read : பிபின் ராவத் மரணம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய இழப்பு - கே.எஸ்.அழகிரி

    முன்னதாக உயிரிழந்த 13 பேரில் உடல்கள் ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவத்தினரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தர ராஜன், தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன்பின்னர், தமிழக அரசின் அமரர் ஊர்தி வாகனத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சூலூர் விமானப்படைத் தளத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டன.
    Published by:Musthak
    First published:

    Tags: Helicopter Crash

    அடுத்த செய்தி