• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நிதி அயோக் வெளியிட்டுள்ள தரவுகளில் தவறுள்ளது: விஜயபாஸ்கர்

நிதி அயோக் வெளியிட்டுள்ள தரவுகளில் தவறுள்ளது: விஜயபாஸ்கர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    நிதி அயோக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் புள்ளி விவரங்கள் தவறாக வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதர துறை அமைச்சரை சந்திக்க உள்ளேன் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: சுகாதாரத் துறையில் கேரளா முன்னிலை: தமிழகத்தின் நிலை என்ன?
     சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிதாக அவசர சிகிச்சைகான செயல் மாதிரி ஆய்வகம் மற்றும் மண்டல பயிற்சி மையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் கலந்து கொண்டார்.

    மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக
    இந்த ஆய்வுக்கூடம் இன்று துவங்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் எண்ணற்ற விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும்.

    தாய் (அவசர விபத்து காய சிகிச்சை மையம்)
    திட்டத்தில் ஆஸ்ரேலியாவை மாடலாக வைத்து நாம் செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு மாவட்டத்தில் இந்த தாய் திட்டத்தை துவங்க உள்ளோம்.

    மத்திய நிதி அயோக் வெளியிட்ட சுகாதார துறை குறித்த ஆய்வறிக்கையில் 9-வது இடத்தில் தமிழகம் பின்னடைந்துள்ளதாக நிதி அயோக் தெரிவித்த புள்ளி விவரங்கள் தவறானவை. இதுகுறித்து தலைமை செயலாளரிடம் முறையிட உள்ளோம். நான் கடிதம் எழுதி உள்ளேன். மத்திய சுகாதரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளேன். தவறான தகவல்களை அதில் அளித்து உள்ளனர், இது திருத்தம் செய்யப்படும்.

    நமது தமிழகத்தைப் பொருத்த வரை 99 சதவிகிதம் பிரசவம் மருத்துமனையில் தான் நடக்கிறது, நிதி அயோக்கில் 20% வீட்டில் இருந்து பிரசவம் என்று கூறி உள்ளனர். இதுபோல் எண்ணற்ற தகவல்கள் தவறாக உள்ளன. எனவே இதுகுறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைக்க உள்ளோம் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: