#தவிக்கும்தமிழகம்: தண்ணீருக்காக ”நள்ளிரவு முதல் மறுநாள் நண்பகல் வரை” காத்திருக்கும் மக்கள்!

 தமிழகத்தில் செயற்கையான குடிநீர் பஞ்சம் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

#தவிக்கும்தமிழகம்: தண்ணீருக்காக ”நள்ளிரவு முதல் மறுநாள் நண்பகல் வரை” காத்திருக்கும் மக்கள்!
மாநகரத்தில் தண்ணீர் பஞ்சம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:48 PM IST
  • Share this:
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தண்ணீருக்காக நள்ளிரவு தொடங்கி மறுநாள் நண்பகல் வரை காத்திருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் காணப்படுகிறது.

பம்மல், பல்லாவரம் ஆகிய இரண்டு நகராட்சிக்குட்பட்ட இந்த இடங்களுக்கு 300 அடி ஆழம் கொண்ட, செங்கழுநீர் கல்குவாரி மற்றும் 23 ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.


தற்போது, வறட்சி காரணமாக 3 ஆழ்துளை கிணறுகளில் மட்டும் இருக்கும் தண்ணீர், பம்மல் நகராட்சி நீர் பகிர்மான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

தட்டுப்பாடு காரணமாக அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் உள்ளிட்ட பல இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தண்ணீர் பிடிக்கும் சூழல் நிலவுகிறது.

நள்ளிரவு 12 மணிக்கு குடங்களை வரிசையில் வைத்து காத்திருக்கும் பொதுமக்களுக்கு மறுநாள் நண்பகல் 12 மணிக்கே தண்ணீர் வழங்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு குடும்பத்திலும் வேலைக்கு செல்லும் நபர்கள், வேலையை விட்டு விட்டு தண்ணீர் பிடிக்க காத்திருக்கின்றனர்.அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் குடிநீர் வழங்கல் துறை சார்பில் டோக்கன் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நீண்டநேரம் காத்திருந்து மக்கள் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர்.

கோவையில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, மாநகராட்சி அலுவலகம் எதிரே தி.மு.கவினர் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அரசு திறம்பட நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் செயற்கையான குடிநீர் பஞ்சம் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

Also Watch: பார்களில் முயல்கறி என்ற பெயரில் எலிக்கறி! வைரல் வீடியோவால் குடிமகன்கள் அதிர்ச்சி

First published: June 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading