ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை திரும்புவோர் கவனத்திற்கு... பல கிலோ மீட்டர் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை

சென்னை திரும்புவோர் கவனத்திற்கு... பல கிலோ மீட்டர் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை

மாதிரி படம்

மாதிரி படம்

பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை காரணமாக சென்னயைில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவது வழக்கம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொங்கல் பண்டிகை முடிந்து பலர் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வருவதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஜனவரி 14 போகிப் பண்டிகை, ஜனவரி 15 பொங்கல் பண்டிகை , 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டாம் களைக்கட்டியது.  பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை காரணமாக சென்னயைில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவது வழக்கம். இதனால் சென்னையில் பல மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்புவர்களுக்கு மாற்று பேருந்து நிலையங்களும் அறிவிக்கப்பட்டது.

அதேப்போன்று பொங்கல் பண்டிகை முடிந்து  சென்னை திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து என அனைத்திலும் கூட்டம் அதிகரித்துள்ளதால் பலர் சொந்த வாகனத்திலும் சென்னைக்கு படையெடுத்துள்ளனர். நாளை அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் திரும்ப வேண்டும் என்பதால் இன்று காலை முதல் சென்னைக்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனிடையே தென்மாவட்டங்களில் இருந்து அதிகமாக பலர் சென்னைக்கு திரும்புவதால் செங்கல்பட்டு மாவட்டம் எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், படாலம் கூட்டு சாலை, பாலாறு பாலம் , செங்கல்பட்டு சுங்கச்சாவடி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரனூர் சுங்கசாவடியில் பல கிலோமீட்டர் வாகனங்கள் ஊர்ந்துசெல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai