ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னைக்கு திரும்பும் மக்கள்: சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னைக்கு திரும்பும் மக்கள்: சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

வரிசையாக நின்ற வாகனங்கள்

வரிசையாக நின்ற வாகனங்கள்

வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு வரிசைக்கட்டி பல மணி நேரம் காத்திருந்ததால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தேர்தலுக்காகவும், தொடர் அரசு விடுமுறை காரணமாகவும் சொந்த ஊருக்கு சென்றவர்கள், சென்னை திரும்பி வருவதால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

கடந்த 18-ம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்வதற்காக சென்னையிலிருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்கு பயணமாகினர். தேர்தலை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும், சுற்றுலா சென்றவர்களும், இன்று ஒரே நேரத்தில் சென்னை திரும்பி வருகின்றனர்.

தனித்தனி வாகனங்களில் திரும்பும் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி, அச்சிறுப்பாக்த்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த, பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு வரிசைக்கட்டி பல மணி நேரம் காத்திருப்பதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனை அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆத்தூர் மற்றும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் கட்டணம் வசூலிக்காமல் வானங்களை அனுப்பி வைத்தனர்.

சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருத்த நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் நடவடிக்கையால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Traffic, Traffic Rules