நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: October 20, 2019, 12:58 PM IST
  • Share this:
தமிழகம் புதுவை கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு பெரும்பாலன இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கும், உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரு தினங்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று வீசுவாதல் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புவனகிரியில் 9 செ.மீ. மழையும் நாகர்கோவிலில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையில் அதிகபட்ச  வெப்பநிலை 33

Loading...

டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

First published: October 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...