தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: October 7, 2018, 7:02 PM IST
  • Share this:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலசந்திரன், தென் அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மினிகாய் தீவுகளுக்கு வடமேற்கில் 920 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி ஓமன் கரையை நோக்கி நகரும் என்று தெரிவித்த பாலசந்திரன், வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.


அடுத்த 3 நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலாக உருபெற்று ஒடிசா கரையை நோக்கி நகரும் எனக் குறிப்பிட்ட பாலச்சந்திரன், அக்டோபர் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதி மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும், அக்டோபர் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், அந்தமான கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.
First published: October 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading