உதகையில் கடும் உறை பனி: -2 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தால் மக்கள் அவதி

உதகையில் கடும் உறை பனி: -2 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தால் மக்கள் அவதி

ஊட்டியில் உறைபனி

கடந்த ஒரு வார காலமாக அதிகாலை நேரங்களில் பனி பொழிவு மிகுதியாக உள்ளது.

  • Share this:
    உதகையில் சமீப நாட்களாக ஏற்பட்டு வரும் கடும் உறை பனி பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இன்று உதகையில் குறைந்த பட்ச வெப்பநிலையாக -2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை கடும் குளிர்காலமாக இருக்கும். இந்த காலத்தில் கடுமையான பனி பொழிவு காணபடும். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பனி காலம் சற்று தாமதமாக தொடங்கியது. தாமதமாக துவங்கிய பனி பொழிவால் தொடக்கத்தில் குளிரின் தாக்கம் குறைவாக காணபட்ட நிலையில் கடந்த ஒரு வார காலமாக அதிகாலை நேரங்களில் பனி பொழிவு மிகுதியாக உள்ளது. இதனால் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை உதகையில் கடுங்குளிர் நிலவியது. இதனையடுத்து இன்று அதிகாலை உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகளில் கடும் உறை பனி பொழிவு ஏற்பட்டது. உதகை தாவரவியல் பூங்காவில் கொட்டிய உறை பனியால் புல்வெளி வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. அதே போல காந்தல் மைதானம், தலைகுந்தா புல்வெளி என நகரின் அனைத்து பகுதிகளிலும் பனிப் போர்வையை பார்க்க முடிந்தது.

    நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும் உறை பனி சுமார் 1 சென்டி மீட்டர் உயரத்திற்கு படிந்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்க காலத்திலேயே உறை பனி அதிக அளவில் இருப்பதால், உதகையில் இன்று காலை கடுமையான குளிர் நிலவியது. உறை பனி பொழிவு காரணமாக உதகை தாவரவியல் பூங்காவில் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 0.4 டிகிரி செல்சியசும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் -2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி உள்ளது. இந்த பனி பொழிவு காரணமாக இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: