தமிழகத்தில் கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

மழை

. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 • Share this:
  தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  Also Read : குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் அளித்த பரிசு... அனைவரது கவனத்தையும் ஈர்த்த புத்தகம்

  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தலைநகர் சென்னையில் நேற்றிரவு மழை பெய்ய தொடங்கியது. அடையாறு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, திருவான்மியூர், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பொழிந்தது. இதேபோல், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, பெரம்பூர், திருவொற்றியூர் பகுதிகளிலும், புறநகரான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் இடங்களிலும் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

  Also Read : கோவைக்கு ஓன்றரை வருடத்தில் புதிய  மாஸ்டர் பிளான்: அமைச்சர் முத்துச்சாமி தகவல்

  ஆவடி, அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தொடர்ந்து நான்காவது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால், அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவியது. சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: