Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை

மழை

மழை

சென்னையை பொறுத்தவரை:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில்,  26.08.2022 மற்றும் 27.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,  தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர்  மற்றும்  திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    28.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,  திருச்சிராப்பள்ளி,  கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், திருப்பத்தூர்,  விழுப்புரம் மாவட்டங்கள்  மற்றும்  புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    29.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,  சிவகங்கை, ஈரோடு,  கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்  மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    30.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    Also Read : அண்ணாமலை பேசியதாக பரவும் ஆடியோ போலியானது - பாஜக விளக்கம்

    சென்னையை பொறுத்தவரை:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:  26.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும்  இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  பலத்தக்காற்று மணிக்கு  மணிக்கு   45 முதல் 55 கிலோ மீட்டர்  வேகத்தில் வீசக்கூடும். தென் மேற்கு வங்கக்கடல் மற்றும்   அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்  பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு   40 முதல் 50 கிலோ மீட்டர்  வேகத்தில் வீசக்கூடும்.

    27.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும்  இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  பலத்தக்காற்று மணிக்கு  மணிக்கு   45 முதல் 55 கிலோ மீட்டர்  வேகத்தில் வீசக்கூடும். தென் மேற்கு வங்கக்கடல் மற்றும்   அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்  பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு   40 முதல் 50 கிலோ மீட்டர்  வேகத்தில் வீசக்கூடும்.

    28.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும்  இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  பலத்தக்காற்று மணிக்கு  மணிக்கு   45 முதல் 55 கிலோ மீட்டர்  வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளனார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Weather News in Tamil

    அடுத்த செய்தி