புதுச்சேரியில் கனமழையால் விளைநிலங்களை சூழ்ந்த வெள்ளம்.. அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... வேதனையில் விவசாயிகள்
புதுச்சேரியில் கனமழையால் விளைநிலங்களை சூழ்ந்த வெள்ளம்.. அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... வேதனையில் விவசாயிகள்
நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் புதுச்சேரியில் சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
நிவர் புயல் காரணமாக அண்மையில் புதுச்சேரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. எனினும் படிப்படியாக வெள்ளநீர் வடிந்தது. ஆனால் போதிய வடிகால் வசதிகள் இல்லாத காரணத்தால், புதுச்சேரி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விளைநிலங்களை வெள்ளநீர் ஆக்கிரமித்துள்ளது. விளைநிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் நெல்மணிகள், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் மூழ்கின. பண்டசோழ நல்லூர், கல்மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் அழுகியுள்ளன.
மடுகரை, கரையாம்புத்தூர், பாகூர், சேலியமேடு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கீரை உள்ளிட்ட காய்கறிகள் மழைநீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புயலின் போது வீசிய சூறைக்காற்றால் கத்தரிக்காய் செடி சேதம் அடைந்துள்ளதாகவும், இழப்பீடு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி அழுகியுள்ளன. கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட செடிகளும் அழுகிவிட்டதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், அரசு உதவினால் மட்டுமே மீண்டும் பயிர் சாகுபடி செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், புதுச்சேரியில் மத்தியக்குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.