நீலகிரியை புரட்டி போட்ட கனமழை! சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

வரலாறு காணாத இந்த மழைக்கு முக்கிய காரணம் மேக வெடிப்பும், நீரிடியும் தான் என மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி மணிவண்ணன் கூறியுள்ளார்.

news18
Updated: August 16, 2019, 11:23 AM IST
நீலகிரியை புரட்டி போட்ட கனமழை! சமூக ஆர்வலர்களின் கோரிக்கை
கோப்பு படம்
news18
Updated: August 16, 2019, 11:23 AM IST
நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கொட்டித்தீர்த்த கனமழையால் அம்மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்த கனமழையால் நீலகிரி மாவட்டமே உருக்குலைந்து போயுள்ளது. அவலாஞ்சியில் வெறும் நான்கு நாட்களில் 2,586 மி.மீ அளவு மழைப்பதிவானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கனமழைக்கு 6 பேர் சிக்கி உயிரிழந்த நிலையில், மீட்பு பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.

கனமழையால் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வெளியில் சமைத்து உண்ணும் நிலைக்கு காட்டுக்குப்பை கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த மழை வந்தால், தங்களது வீடு முற்றிலுமாக இடிந்து விடும் என வேதனை தெரிவிக்கும் அவர்கள், அரசாங்கம் தங்களுக்கு வீடு கட்டி தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


வரலாறு காணாத இந்த மழைக்கு முக்கிய காரணம் மேக வெடிப்பும், நீரிடியும் தான் எனக்கூறும் மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி மணிவண்ணன், நீலகிரியில் சாரசரியை விட 1.2 டிகிரி வெப்பம் அதிகரித்துள்ளதாகவும், வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஈரப்பதமும் ஒரு காரணி எனவும் தெரிவிக்கிறார்.

காலநிலை மாற்றத்தால் பெய்துள்ள இந்த மழையளவை ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறும் சமூக ஆர்வலர் சிவதாஸ், வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

Also see...

Loading...

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...