தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்... 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்... 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • Share this:
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் நெல்லை, தென்காசி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமலை தொடங்கிய நிலையில், வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. முத்துராமன்பட்டி, அல்லம்பட்டி, பாத்திமா நகரில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கியது. ஐந்து முனை, பேருந்து நிலையம் போன்ற தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.


தூத்துக்குடியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதேபோல் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை கொட்டியதால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்தது.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் நெல்லை, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 5 நாட்களுக்கு சென்னை மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, எதிர்பார்த்ததை விட கூடுதலாக மிக கன மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேலும், மழை நீட்டிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
First published: October 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading