Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

கனமழை

கனமழை

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்

    தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகலில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல விடாமல் பெய்த தொடர்மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மேலும் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவக்காற்று காரணமாகவும் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பது காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கனமழை தொடரும் என்றும் இன்றைய தினம் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் அதன் பிறகு மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Chennai Rain, Chennai rains, Flood, Flood alert, Puducherry, Weather News in Tamil

    அடுத்த செய்தி