Home /News /tamil-nadu /

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

குமரிக்கடல் பகுதிகளில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24மணி நேரத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • News18
  • Last Updated :
தென் தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று தாய்லாந்து வளைகுடா பகுதிகளில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய அந்தமான பகுதிகளின் நிலவி வருகிறது. இந்த நிலையானது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள கணிப்புகளின் அடிப்படையில் தமிழகம் நோக்கி வரும் என்று முழுமையாக கூற முடியாது என்றும், காற்றழுத்த பகுதியின் தீவிரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 24மணி நேரத்தில் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..

 

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

9ம் தேதி - அந்தமான் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

10ம் தேதி - அந்தமான்,தென் கிழக்கு மற்றும் மத்திய வங்ககடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

11ம் தேதி - வடக்கு அந்தமான் கடல்,தென் கிழக்கு மற்றும் மத்திய வங்ககடல் செல்ல வேண்டாம்.

12ம் தேதி -கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்ககடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

Also see...

Published by:Vaijayanthi S
First published:

Tags: Weather Forecast

அடுத்த செய்தி