தமிழகத்தில் நேற்று கொட்டித் தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்

கோப்புப்படம்

தமிழகத்தில் கத்தரி வெயில் இன்றுடன் முடியும் நிலையில், கொடைக்கானல், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் நேற்று மழை பெய்தது... திருப்பூரில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 • Share this:
  தமிழகத்தில் கத்தரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

  மாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதையடுத்து, சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

  திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பழங்கரை, ஆட்டையம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சுதந்திரநல்லூர், தெக்கலூர் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. அத்துடன், காங்கயம், வெள்ளகோவில், வட்டமலையில் ஆலங்கட்டி மழை பெய்தது.

  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, மணலி, விளக்கடி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  இதனிடையே, நேற்று தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதத்தை கடந்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 105.8டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவானது. வேலூரில் 105.44 டிகிரி பாரன்ஹீட்டும், கரூர் பரமத்தி, மதுரை, ஈரோட்டில் 104 ஆகவும் பதிவானது.

  அத்துடன், திருச்சி, திருப்பத்தூர், சேலம், பாளையங்கோட்டையில் 102 டிகிரி பாரன்ஹீட்டாகவும், தருமபுரியில், நாகை, பரங்கிபேட்டையில் 100 டிகிரி பாரன்ஹீட்டாகவும் வெப்பம் பதிவானது.

  தமிழகத்தில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய கத்தரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Also see...

  நீண்ட கால வைப்பு நிதி, சேமிப்புக் கணக்குகளின் வட்டி விகிதத்தைக் குறைக்கின்றன வங்கிகள்  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vaijayanthi S
  First published: