• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

    வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் தற்போது வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 9 விழுக்காடு குறைவான அளவே மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறினார். சென்னையிலும் தற்போது வரை வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 45 விழுக்காடு குறைந்தே பெய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்று கூறிய புவியரசன், அடுத்த 5 நாட்களுக்கு எந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமும் உருவாக வாய்ப்பில்லை என்றார். நாளை முதல் மழை குறையத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 23 சென்டிமீட்டர் மழை பதிவானதாக புவியரசன் கூறினார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: