• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு தினங்களுக்கு மிக கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு தினங்களுக்கு மிக கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி மழை

கன்னியாகுமரி மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களான கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இன்றும் நாளையும் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஒரு சில இடத்தில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முனைவர் பா.கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வட உள் தமிழக பகுதிகளில் (3.6 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று  தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், நீலகிரி, திண்டுக்கல், தேனி ,திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில்  நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: மழைக்காலம்: என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது- வழிமுறைகள் வெளியீடு!


    தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில்  நாளை மறுநாள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது.  இன்றும் நாளையும்  குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  இதேபோல்,  தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

    மேலும் படிக்க: வெள்ளத்தில் சடலங்களை சுமந்து செல்லும் கிராம மக்கள்


    அரபிக்கடல் பகுதிகள்
    இன்றும் நாளையும்  கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: