• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

கனமழை

கனமழை

புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.

  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 13 சென்டி மீட்டரும், அம்பாசமுத்திரத்தில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. கேரளா, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு 3 தினங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

  தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரவு நேரத்தில் மிதமான மழை பொழிந்தது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. தேனி, அல்லிநகரம், பெரியகுளம், சோத்துப்பாறை அணை, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், செண்பக்தோப்பு அணையில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரகுநாதபுரம் பெரிய ஏரி நிரம்பியது. இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் மேள தாளத்துடன் வந்து, ஏரியில் இருந்து உபரி நீரை திறந்து விட்டனர். அப்போது, திருமணத்திற்கு தாலி, பட்டுப்புடவை, வளையல் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்குவது போன்று, தாம்பூல தட்டில் வைத்து தண்ணீரில் விடப்பட்டது.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மருதங்கோடு பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில், 15-க்கும் மேற்பட்ட வீடுகளின் மதில் சுவர்கள் இழுத்துச் செல்லப்பட்டன. அப்பகுதியில், இதுபோன்று காட்டாற்று வெள்ளத்தை கண்டதில்லை என்று பொதுமக்கள் கூறும் அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது.

  Must Read : இவ்வளவு குறைவா? பெட்ரோல், டீசல் போட புதுச்சேரிக்கு படையெடுக்கும் தமிழக வாகன ஓட்டிகள்!

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் இனாம்மணியாச்சி. மந்தித்தோப்பு, திட்டங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், மாலையில் லேசாக தொடங்கிய மழை, நேரம் செல்ல செல்ல இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டியது. இதனால், கோவில்பட்டியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதேபோல தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: