Home /News /tamil-nadu /

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

வடக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் தாக்கம் காரணமாகவும் தென்மேற்கு பருவமழையின் காரணமாகவும் தமிழக மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் மற்றும் தேனி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழையும் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை  ( 05.08.2020 ) கோவை நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .

Also read... கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்கள் - இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் மேல் பவானி 31 சென்டிமீட்டர் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி 22 சென்டிமீட்டர் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் 20 சென்டிமீட்டர் நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் 19 சென்டிமீட்டர் கோவை மாவட்டம் வால்பாறை ,சோலையார் தலா  13 சென்டிமீட்டர் தேனி மாவட்ட பெரியார் 12 சென்டிமீட்டர் கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சின்கோனா, நீலகிரி மாவட்டம் எமரால்டு, பந்தலூர் தலா 11 சென்டிமீட்டர் நீலகிரி மாவட்டம் தேவலா ,கிளென்மோர்கன் தலா 10 சென்டிமீட்டர் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் தலா 9 சென்டிமீட்டர் தேனி மாவட்டம் தேக்கடி தலா 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஆகஸ்டு 4 மற்றும் 5 தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.



ஆகஸ்டு 4 முதல் ஆகஸ்ட் 6 வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு ,மகாராஷ்டிரா, கோவா கடலோர பகுதிகள், தென்மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை  நாளை ( 5 .8. 2020 ) இரவு 11 .30 மணி வரை கடல் அலை 3.1 முதல் 3.7 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Rain updates, Weather Forecast

அடுத்த செய்தி