ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

கனமழை

கனமழை

Weather update | தென்கிழக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

    15.12.2022 முதல் 18.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    19.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    அந்தமான் கடல் பகுதிகள்: இன்று (15.12.2022) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 15.12.2022 & 16.12.2022 : சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 16.12.2022 & 17.12.2022 : சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    First published:

    Tags: Heavy rain, Tamilnadu, Weather News in Tamil