ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 5, 7ஆம் தேதிகளில் மிரட்டப்போகும் கனமழை... இந்திய வானிலை மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 5, 7ஆம் தேதிகளில் மிரட்டப்போகும் கனமழை... இந்திய வானிலை மையம் அலெர்ட்!

மழை

மழை

Weather update | காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வரும் 5 மற்றும் 7ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வரும் 5 ஆம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்று தாழ்வு பகுதி உருவாகக்கூடிய சாதகமான நிலை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : நாளை மறுநாள் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் டிச.6 வரை தொடர் மழை!

இதனிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு லேசானது முதல் மிதமான அளவில் பரவலாக மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், வரும் 5 மற்றும் 7ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கன மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நாளை மற்றும் நாளை மறுநாள் அந்தமான் கடல் பகுதிகளில், 5ஆம் தேதி மற்றும் 6ஆம் தேதிகளில் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில், 6ஆம் தேதி முதல்  தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Heavy rain, MET warning, Weather News in Tamil