• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை

திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை

மழை

மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு, இன்றும், நாளையும், மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் திருச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடாவில், இன்றும் நாளையும் சூறாவளி காற்று வீசும் என்றும் வளி மண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடுன் கூடிய கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். என்றும், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதால், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு, இன்றும், நாளையும், மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

    இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் முழுகொள்ளளவை எட்டியுள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளில் இருந்து உபரிநீரை திறக்கும்போது முன்னதாகவே அறிவிப்புகளை வெளியிட வேண்டும். உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி அணை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    Must Read: ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் - பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 2 இளைஞர்கள் கைது!

    வெள்ள அபாயம் ஏற்படுவதை தவிர்க்க ஆட்சியர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: