• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

மழை வெள்ளம்

மழை வெள்ளம்

கனமழை காரணமாக சென்னையில் இன்று அரசுத்துறை அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வழிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    மேலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதேபோல் திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், மத்தியகிழக்கு அரபிக் கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக சென்னையில் இன்று அரசுத்துறை அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் ஆவின், பொது போக்குவரத்து, மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களும் இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில், மழையின் சூழலை பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதேபோல் தனியார் பள்ளிகளும் மழையின் பாதிப்பை பொறுத்து விடுமுறை அளித்து கொள்ளலாம் என தமிழ்நாடு தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளது.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், மின் கசிவு ஏற்படாத வகையில் பார்த்து கொள்ளவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Must Read : School Holiday : தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    பள்ளிகளில் உள்ள கணினி உள்ளிட்ட மின் சாதனங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: