முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Red Alert | சென்னை உட்பட 4 மாவட்டகளுக்கு ரெட் அலெர்ட்

Red Alert | சென்னை உட்பட 4 மாவட்டகளுக்கு ரெட் அலெர்ட்

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது.

    சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    Also Read : தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!

    சென்னையில் பெய்து வரும் கனமழையினால் வடபழனி, கோயம்போடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்ப்ட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    First published: