ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்!

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்!

புவியரசன்

புவியரசன்

தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து 26ம் தேதி முழுமையாக  விலகவுள்ளது. அன்றைய தினமே வடகிழக்கு பருவ மழை தென்னிந்திய பகுதிகளில்  தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்  புவியரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வளிமண்டலம் குமரி கடல் பகுதி ஒட்டி நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை , கிருஷ்ணகிரி , ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

  தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

  இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி... கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

   வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.  தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து 26ம் தேதி முழுமையாக  விலகவுள்ளது. அன்றைய தினமே வடகிழக்கு பருவ மழை தென்னிந்திய பகுதிகளில்  தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது  என்று தெரிவித்தார்.

  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழையால் மழை பொழிவு இருந்தது. இந்த ஆண்டு இயல்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் 18 சென்டிமீட்டர் மழை பெய்ய வேண்டும் இப்போது 17 சென்டிமீட்டர் செய்துள்ளது எனவே இந்த பருவ மழை காலத்தில் நல்ல மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க; குயின்ஸ்லேண்ட் நிலத்தை மீட்க, வருவாய் துறையுடன் இணைந்து நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

  Published by:Murugesh M
  First published:

  Tags: Heavy rain, Tamilnadu