ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் வெளுத்துவாங்க போகும் கனமழை!

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் வெளுத்துவாங்க போகும் கனமழை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Chennai Rains : சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 30ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதேபோல 26-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை வரையில்  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் புதலூரில் தலா 17 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும்.

    இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai rains