Home /News /tamil-nadu /

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

TN Rain Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு தினங்களாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று பெய்த கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் மாவட்ட மற்றும் தேதி வாரியாக மழைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,

    06.07.2022 மற்றும் 07.07.2022 : தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    08.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    09.07.2022, 10.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை:

    அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

    மேல் பவானி (நீலகிரி) 13, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 12, வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 10, சின்கோனா (கோயம்புத்தூர்) 9, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) தலா 7, தேவாலா (நீலகிரி) 6, நடுவட்டம் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 5, கிளென்மார்கன் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி) தலா 4, வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), திருத்தணி (திருவள்ளூர்), அவலாஞ்சி (நீலகிரி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பெரியார் (தேனி) தலா 3

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    06.07.2022 முதல் 08.07.2022 வரை: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    06.07.2022 முதல் 10.07.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    06.07.2022 முதல் 10.07.2022 வரை: குஜராத், மகாராஷ்டிரா கடலோரப்பகுதிகள், வடகிழக்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Heavy Rainfall, Rain Update

    அடுத்த செய்தி